மீண்டும்

கலைச்செல்வி காலத்தை நோக்கி

சிற்பி ஐயாவை பற்றி


சிற்பி சி. சரவணபவன் (28 பெப்ரவரி 1933 - 9 நவம்பர் 2015) ஈழத்தின் குறிப்பிடத்தக்க ஓர் எழுத்தாளர். சிறுகதையாசிரியர், நாவலாசிரியர், இதழாசிரியர் எனப் பல தளங்களிலும் இயங்கியவர். கலைச்செல்வி இதழின் ஆசிரியராகப் பணியாற்றியவர். சிவசரவணபவன் 1933 ஆம் ஆண்டில் யாழ்ப்பாண மாவட்டம் காரைநகரில் சிவசுப்பிரமணியக் குருக்கள், சௌந்தராம்பாள் ஆகியோருக்குப் பிறந்தவர். கந்தரோடையில் வாழ்ந்து வந்தவர். கந்தரோடை தமிழ்க் கலவன் பாடசாலையில் ஆரம்பக் கல்வியையும், ஸ்கந்தவரோதயா கல்லூரியில் இடைநிலைக் கல்வியையும் கற்று பின்னர் சென்னை கிறித்துவக் கல்லூரியில் உயர்கல்வி பயின்று பட்டம் பெற்றார். யாழ்ப்பாணம் திருநெல்வேலி செங்குந்த இந்துக் கல்லூரியில் ஆசிரியராகவும், உசன் இராமநாதன் மகா வித்தியாலயம், யாழ் வைத்தீஸ்வர வித்தியாலயம் ஆகியவற்றில் அதிபராகவும் பணியாற்றினார். 1953 இல் சென்னையில் கல்வி கற்கும் வேளையில் செலையூர் மன்றம் வெளியிட்ட இளந்தமிழன் என்ற இதழின் ஆசிரியரானார். திருநெல்வேலி அவ்வை தமிழ்ச்சங்கத்தினர் நடத்திய கட்டுரைப் போட்டியில் பங்குபற்றி பரிசு பெற்றார்.

மேலும் வாசிக்க >>

தேடுக


நூலின் பெயர், எழுதியவர், பதிப்பகம், வெளியிட்ட இடம் போன்ற விடயப் பெயர்களின் மூலம் தேடுக.

சிற்பி ஐயாவின் விருதுகள், பரிசுகள்


ஐயாவினால் உருவாக்கப்பட்ட படைப்புக்கள்


சிற்பி சிவசரவணபவன் அவர்களால் உருவாக்கப்பட்ட இலக்கிய வடிவங்களும் அவற்றின் விபரங்களும்..

மேலதிக விபரங்கள்


Feel free to contact us


Kantharodai, Chunnakam,Jaffna,Sri Lanka.P: (+94) 777583377